Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 3 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் சூரியனை போல பிரகாசிக்கபோகுது..
Sun Transit In Ayilyam Nakshatra 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல் நட்சத்திரத்தையும் மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் தலைவனாக கருதப்படுபவர் சூரியன் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதி ஆவார். கிரங்களில் இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி சூரியன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். புதனின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சூரியன் மற்றும் புதனின் அருளைப் பெற்று, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், திடீர் நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வேலைக்கு செல்லும் வயதில் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பாக இருக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தலைமைத்துவ திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும் மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு வலுவடையும். பரம்பரை சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆக்ஸ்ட் 03 முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். குறுகிய அல்லது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களை தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
