Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
2026 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் 2 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது!
Sun Transit 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் இன்னும் ஓரிரு வாரங்களில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் இரண்டு முறை தனது நிலையை மாற்றவுள்ளார்.
அதில் முதலாவதாக ஜனவரி 11 ஆம் தேதி சூரியன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதன் பின் ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் பெயர்ச்சியாகவுள்ளார். இப்படி இரண்டு முறை சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால் அத்ன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக வேலையில் நல்ல முன்னேற்றமும், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படவுள்ளது. இப்போது 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல உயர்வு ஏற்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் 2 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். இக்காலத்தில் சூரியன் செல்வ வீட்டில் இருப்பதால், எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். பேச்சுத் திறன் மேம்படும் மற்றும் இது மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். இந்த ராசியின் அதிபதி சூரியன் என்பதால், மறைமுக எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். முக்கியமாக சூரியனின் அருளால் இம்மாதத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
