Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி-சூரியனின் சக்திவாய்ந்த சேர்க்கை: மே 20-ல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்!
Sun Saturn Powerful Conjunction On 20 May 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் பயணிக்கும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மே 20 ஆம் தேதி ஒரு சக்தி வாய்ந்த கிரக சேர்க்கை நிகழவுள்ளது. அதாவது மே 20 ஆம் தேதி நீதிமான் சனி பகவான் மற்றும் கிரகங்களின் தலைவனான சூரியனின் சக்தி வாய்ந்த சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் போது சனி பகவான் மீன ராசியிலும், சூரியன் ரிஷப ராசியிலும் இருப்பார்கள். இவ்விரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருப்பதால், திரியேகாதச யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதோடு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எந்த வேலையிலும் வெற்றியைக் காண்பார்கள். இப்போது சனி சூரியனின் சக்தி வாய்ந்த சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சனி சூரியனின் சக்தி வாய்ந்த சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை வலுபெறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கன்னி
சனி சூரியனின் சக்தி வாய்ந்த சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவுகள் வலுவடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு பரிவர்த்தனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சேர்க்கையால் எதிர்பாராத அளவில் ஒரு பெரிய ஜாக்பாட் அடிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி சூரியனின் சக்தி வாய்ந்த சேர்க்கையால் திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களின் செயல்திறன் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி, செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
