Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
சனி-சூரியன் உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கப்போகுது...
Sun Saturn Make Dwadash Yog On April 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் சனியின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலமாக இருக்கும்.
என்ன தான் சூரியனும் சனியும் தந்தை மகனாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் எதிரிகளாக கருதப்படுகின்றனர். தற்போது சூரியன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதேவேளையில் சனியும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி தனது உச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். அதோடு ஏப்ரல் 16 ஆம் தேதி சனியும், சூரியனும் ஒருவருக்கொருவர் 30 டிகிரியில் இருந்து, துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகம் சக்தி வாய்ந்த யோகங்களுள் ஒன்று. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது சூரியன் சனி உருவாக்கும் துவாதஷ் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகமானது சாதகமாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகமானது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கும். வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது.
தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடப்பதால், வாழ்க்கையில் வெற்றியும், சந்தோஷமும் மெதுவாகவே வரத் தொடங்கும். தொழிலதிபர்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பதோடு, வெற்றியும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











