Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் சனியின் நட்சத்திரத்துக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது!
Sun Nakshatra Transit On 19 November 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, பூமியிலும், மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
வேத நாட்காட்டியின் படி, சூரியன் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் சூரியன் டிசம்பர் 02 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயரும், கௌரவமும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேசியே பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும்.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வசதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். படைப்புத்திறனால் நல்ல புகழைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications