Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
12 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 27-ல் ஒன்றிணையும் 3 கிரகங்கள்: இந்த 3 ராசிக்கு வெற்றியும் பணமும் குவியப்போகுது..
Sun Moon Jupiter Conjunction In Gemini On 27 June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், மரியாதை, கௌரவம், தன்னம்பிக்கை, அரசு வேலை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் மிகவும் மங்களகரமான கிரகமாக மற்றும் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் அறிவு, செழிப்பு, செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாவார்.
மறுபுறம் சந்திரன் மனதின் காரணியாவார். இதில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் சந்திரன் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இந்த மூன்று கிரகங்களும் ஜூன் 27 ஆம் தேதி மிதுன ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். ஏனெனில் சந்திரன் ஜூன் 27 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மிதுன ராசியில் ஏற்கனவே குருவும், சூரியனும் இருப்பதால், இந்த சந்திர பெயர்ச்சியால் மிதுனத்தில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த 3 கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 27-ல் ஒன்றிணையும் 3 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு, சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் அதன் தாக்கம் இந்த ராசிக்காரர்களின் பேச்சில் காணப்படும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். உடலின் மன வலிமை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பு அல்லது எழுத்துடன் தொடர்புடையவராக இருந்தால், இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு, சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு, சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெருமளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். கண்டக சனி நடந்தாலும், இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான சில புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்து இக்காலத்தில் அதை செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
