Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரியன் செவ்வாயால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்கும்.. உஷார்..
Sun Mars Made Shadashtak Yog 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சூரியன் தனது மகன் சனிபகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி புதனின் மிதுன ராசிக்குள் நுழைந்தார். இதனால் சூரியன் மற்றும் செவ்வாயின் நிலையினால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான நல்ல பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு பெரிய நஷ்டத்தை, இழப்பை ஏற்படுத்தலாம். இப்போது சூரியன் செவ்வாயால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
தனுசு
சூரியன் செவ்வாய் உருவாக்கியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணியிடத்தில் திடீரென்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் சில பெரிய முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி முடிவெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சனைகளால் பெரிய அளவில் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். இதைத் தவிர்க்க உங்கள் துணையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக பேசுங்கள். இதனால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் பல சிக்கல்களை சந்திக்கலாம். தொழில் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் அவதிப்படலாம்.
கடகம்
சூரியன் செவ்வாயால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பலவிதமான சிரமங்களை சந்திக்க நேரிடும். எந்த வேலையை செய்தாலும் தடைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் கஷ்டப்படுவீர்கள்.
திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கலாம்.
கன்னி
சூரியன் செவ்வாய் உருவாக்கியுள்ள ஷடாஷ்டக யோகமானது கன்னி ராசிக்காரர்களின் தைரியத்தை அதிகரிக்கலாம். இருப்பினும் இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குழந்தைகள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். பேச்சில் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பேச்சே பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். முக்கியமாக அதிக மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
