Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
2026-ல் மகர ராசியில் ஒன்றிணையும் செவ்வாய்-சூரியன்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது...
Sun Mars Conjunction In Capricorn 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில வாரங்களில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, வருகிற 2026 ஆம் ஆண்டு சற்று சிறப்பானது. அதுவும் இந்த ஆண்டின் முதல் மாதம் இன்னும் அற்புதமானது. ஏனெனில் ஆண்டின் முதல் மாதத்திலேயே கிரகங்களின் நிலைகளால் பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளது.
முக்கியமாக சனி பகவானின் ராசியான மகர ராசியில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் ஒன்றிணைந்து மங்கள ஆதித்ய யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த கிரக சேர்க்கையால் உருவாகும் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிறைய செல்வத்தையும், வெற்றியையும் பெறவுள்ளனர்.

அதோடு தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் போன்றவையும் அதிகரிக்கவுள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மகர ராசியில் ஒன்றிணையும் செவ்வாய் சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன ஆரோக்கியம் மேம்படும். நிதி விஷயங்களில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். எடுக்கும் வேலைகளில் வெற்றியைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்தாலும், நல்ல பலனைப் பெறக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். மன அமைதி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல பணத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications