18 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள கேது-சூரிய சேர்க்கை: இன்று முதல் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு லக்கு தான்..!

Sun Ketu Conjunction In Virgo 2024 After 18 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கவும் செய்கின்றன. அப்படி கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் கன்னி ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைந்துள்ளார். இதனால் கன்னி ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை அடுத்த மாத காலம் நீடித்திருக்கும்.

Sun Ketu Conjunction In Virgo 2024 After 18 Years These Zodiac Signs Will Get More Profit

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, திடீர் நிதி ஆதாயமும் கிடைத்து, வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இப்போது கன்னியில் நிகழ்ந்துள்ள கேது சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். வியாபாரிகள் தங்களின் திட்டங்களை செயல்படுத்த இக்காலம் சிறந்ததாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 18, 2024, 9:21 [IST]
Desktop Bottom Promotion