Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் கேது-சூரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Sun Ketu Conjunction In Leo 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சொந்த ராசிக்கு சூரியன் 12 மாதங்கள் கழித்து நுழைகிறார்.
அதே வேளையில் இந்த சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இந்த கேது சிம்ம ராசிக்குள் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால், சிம்ம ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கை அவ்வளவு சிறப்பாக கருதப்படவில்லை.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பண விஷயத்தில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் கேது-சூரிய சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் கேது மற்றும் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். கூட்டு தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்விகளை சந்திக்க நேரிடும். மறைமுக எதிரிகள் நிறைய தொந்தரவு செய்யலாம். வயிறு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த ராசிக்கு ஏழரை சனி நடப்பதால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். சமூகத்தில் உங்களின் மரியாதை குறையலாம். வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்புக்களையே சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபதது ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
