Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் அதாவது ஒவ்வொரு 28 முதல் 30 நாட்களுக்கும் தன்னுடைய ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த மாற்றத்தின் போது, சூரியன் மற்ற கிரகங்களுடன் இணைகிறது. இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு, இது நேர்மறையான விளைவுகளைத் தருகிறது, அதேசமயம் சிலருக்கு எதிர்மறையான விளைவுகளை தரப்போகிறது.
செப்டம்பர் 16 அன்று, சூரியன் கன்னி ராசியில் இரவு 07:29 மணிக்கு சஞ்சரித்தார்ர். இந்த ராசியில் கேது ஏற்கனவே இருக்கிறார். இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னி ராசியில் சூரியனும் கேதுவும் இணைகிறார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை, சூரியன் இதே நிலையில் இருக்கப் போகிறார். சூரியனும் கேதுவும் இணைவதால் சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மீனம்
சூரியனும் கேதுவும் இணைவதால் மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையே ஒருங்கிணைப்பு குறைபாடு வரலாம். இந்த காலத்தில் யாருடனும் கூட்டு சேர்ந்து வேலை செய்யாதீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடனும் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதனால் குடும்ப அமைதியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மீன ராசிக்காரர்களின் உடல்நிலை மோசமாகவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சனிபகவானின் கோபப்பார்வையும் அவர்களை பாதிக்கலாம், எனவே அவர்கள் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கன்னி ராசிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கன்னி ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கும், ஆனால் அதனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வியாபாரிகள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் உங்கள் பயணத்தின் போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் கட்டுப்பாடு வேண்டும் மற்றும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு நெருக்கமானவருடன் சண்டை ஏற்படலாம். இது முதலீட்டிற்கு சாதகமான காலம் அல்ல. பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாருடனும் சண்டையில் ஈடுபடாதீர்கள் மற்றும் பிரச்சனையான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனும் கேதுவும் இணைவது சிக்கலான காலகட்டத்தை ஏற்படுத்தப்போகிறது. நீங்கள் ஏதேனும் சட்ட வழக்குகளில் சிக்கி இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். உங்களின் எதிரிகளின் கை ஓங்கி இந்த காலகட்டத்தில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் உணவுப்பழக்கம் மீது கவனம் செலுத்துங்கள்.
அவர்கள் வயிறு அல்லது இதயம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதயம் தொடர்பான நோய்களை நீங்கள் எதிர்கொண்டால், சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருந்தால் நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
