Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
1 வருடம் கழித்து உருவாகியுள்ள சுக்ராதித்ய ராஜயோகம்: அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு பிரமாதமா இருக்கும்...
Sukraditya Rajyog In Gemini 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சூரியன் புதனின் மிதுன ராசியில் ஜூன் 15 ஆம் தேதி முதலாக பயணித்து வருகிறார். அதே வேளையில் இந்த மிதுன ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார்.
இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 1 ஆண்டிற்கு பின் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது மிதுன ராசியில் உருவாகியுள்ள சுக்ராதித்ய ராஜயோகத்தால் ஜூலை 16 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்றலாம். இதனால் உங்களின் வருமானம் பெருகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்கார்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறக்கூடும். வணிகர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும் மற்றும் நிறைய லாபத்தையும் தரும். நிதி ரீதியாக வலுவாக இருக்கும். இதனால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். செயல்திறனும், வேலைகளும் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications