Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
சூரிய கிரகண நாளில் நிகழும் சனி-ராகு சேர்க்கை: இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Solar Eclipse and Saturn-Rahu Conjunction in Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் சேர்க்கைகள் இன்னும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான மற்றும் அரிதான கிரக சேர்க்கை மார்ச் 29 ஆம் தேதி நிகழவுள்ளது.
அதுவும் இந்த நாளில் தான் நீதிமான் சனி பகவான் இந்நாளில் தான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். அந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது. அத்துடன் இதே நாளில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

இந்த சூரிய கிரணத்தின் போது சூரியனும் மீன ராசியில் உள்ளார். இப்படி ஒரே நாளில் கிரகங்களின் அற்புதமான சங்கமம் நிகழ்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கப் போகிறது.
ஜோதிடத்தில் ராகுவும், சனியும் சற்று கொடூரமான கிரகங்களாக கருதப்படுகின்றன. ஆனால் இவ்விரு கிரகங்களும் அவ்வளவு மோசமானவை அல்ல. இவ்விரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
அதுவும் இந்த இரண்டு கிரகங்களும் மீன ராசியில் ஒன்றிணைந்து பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். இப்போது 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகண நாளில் சனி ராகு சேர்க்கையும் நிகழ்வதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சூரிய கிரகணமும், சனி ராகு சேர்க்கையும் ஒரே நாளில் நிகழ்வதால், ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நுண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.
கடகம்
சூரிய கிரகணமும், சனி ராகு சேர்க்கையும் ஒரே நாளில் நிகழ்வதால், கடக ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக, வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களின் ஒவ்வொரு வேலையிலும், செயலிலும் இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கன்னி
சூரிய கிரகணமும், சனி ராகு சேர்க்கையும் ஒரே நாளில் நிகழ்வதால், கன்னி ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், வெற்றியையும் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
சூரிய கிரகணமும், சனி ராகு சேர்க்கையும் ஒரே நாளில் நிகழ்வதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி, ராகுவின் சேர்க்கையால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால், நல்ல பாராட்டைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
சூரிய கிரகணமும், சனி ராகு சேர்க்கையும் ஒரே நாளில் நிகழ்வதால், கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல புதிய வழிகள் திறக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சூரிய கிரகணத்தை சரியான கண் பாதுகாப்பு இல்லாமல் நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் இது கண்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
சூரிய கிரகணங்கள் ஆண்டில் குறைந்தது இரண்டு முறை நிகழ்கின்றன. ஆனால் அவை பூமியில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் எப்போதும் தெரியாது.
2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 ஆம் தேதி நிகழவுள்ளது. சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது ஏற்படுகிறது, இதனால் சூரிய ஒளி முழுவதுமாக அல்லது பகுதியாக மறைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications