Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதத்தில் உருவாகும் ஆபத்தான யோகம்: இந்த 5 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Shul Yog On 14 June 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள், பார்வைகள் மற்றும் கிரக சேர்க்கைகளால் பல்வேறு சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு அசுப யோகம் ஜூன் மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஜூன் 14 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு உருவாகி, ஜூன் 15 ஆம் தேதி காலை 8.56 மணிக்கு முடிவடையும்.

இந்த யோகமானது மிகவும் அசுப யோகமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்கவுள்ளனர்.
அதுவும் தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், இக்காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு சவாலானதாக அமையக்கூடும். குறுகிய காலம் இந்த யோகமானது உருவானாலும், அதன் தாக்கம் சில நாட்கள் வரை நீடித்திருக்கும். எனவே இந்த சூல யோகத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சூல யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். எதிர்பாரா சில மோசமான செய்திகளைப் பெறக்கூடும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
சூல யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் விரக்தி அடையக்கூடும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். கால் வலி அல்லது உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும். அலுவலகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறுகளும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கி, வேலைக்கு ஆப்பு வைத்துவிடும்.
தனுசு
சூல யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் உறவுகளில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற அதிகம் அலைய வேண்டியிருக்கும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்
சூல யோகத்தால் மகர ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவசரப்பட்டு எந்த ஒரு புதிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
சூல யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் அதிக எரிச்சலும், மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் மன அமைதியையும் பொறுமையையும் பேணுவது மிகவும் முக்கியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


