Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
30 ஆண்டுகள் கழித்து செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்...
Shani Third Sight On Mars After 30 Years: ஜோதிடத்தில் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலனை அளிப்பவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இவர் தற்போது தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ராசியில் சனி பகவான் நுழைந்துள்ளார். சனி பகவான் இருக்கும் இடத்தைப் போன்றே, சனி பகவானின் பார்வையும் சக்தி வாய்ந்தது. அதற்காக சனி பகவான் பார்க்கும் அனைத்து பார்வைகளும் மோசமானதாக இருப்பதில்லை.

சனியின் பார்வையில் 3, 7, 10 ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. இதில் 3 ஆம் பார்வை தான் பல சிரமங்களைத் தரும். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வரும் வேளையில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் தற்போது பயணித்து வருகிறார்.
இதனால் சனியின் மூன்றாம் பார்வையானது செவ்வாயின் மீது விழுகிறது. இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு சிரமமாக இருந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வையால் நன்றாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதால் பண பிரச்சனைகளின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் வேலைகளில நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும. குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வையானது சாதகமான பலன்களை அளிக்கும். பணிபுரிபவர்கள் சனியின் அருளால் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கம். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகள் எண்ணப்படி வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வையானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால் செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளும் சனியின் அருளால் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். முக்கியமாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications