Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சனி மகாதசை வரப்போவதால் இன்னும் 19 வருஷத்துக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. சனியின் தாக்கம் ஒவ்வொரு ராசியிலும் வெவ்வேறு பலன்களைத் தருகிறது. சனி சாதகமாக இருந்தால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். அதேசமயன் சனி பாதகமான நிலையில் இருந்தால் அவர்கள் பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகாதசை தற்போது ஆரம்பமாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் கிடைக்கும். அவர்களில் நிதிநிலையில் முன்னேற்றம் இருக்கும், மேலும் அவர்கள் வாழ்வில் பல சாதனைகளை செய்வார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த நற்பலன்கள் கிடைக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசியில் சனி 5ம் வீட்டிலும், 6ம் வீட்டிலும் இருக்கிறார். எனவே, கன்னி ராசிக்காரர்கள் சனியின் அருளால் வரும் நாட்களில் பல நன்மைகளைப் பெறலாம். அவர்களின் நிதிநிலை வெகுவாக மேம்படும். சனிபகவனின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளும் தைரியமும், ஆற்றலும் கிடைக்கும்.
வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளை அவர்கள் அனுபவிக்க நேரிடலாம். உங்கள் திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். அதனால் அவர்கள் சமூகத்தில் மிகவும் புகழ்பெற்றவராக மாறலாம்.
தனுசு
தனுசு ராசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வீடுகளுக்கு அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். எனவே, சனி மகாதசை தொடங்குவதால், தனுசு ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறலாம். தனுசு ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், எனவே அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இப்போது அவர்களுக்கு கிடைக்கும்.
அவர்களின் உழைப்புக்கும், முயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரங்களை இப்போது பெறுவார்கள். இதன் காரணமாக, பெரிய அளவிலான நிதி ஆதாயங்களைப் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் புத்திக்கூர்மையால் சிறந்து விளங்குவார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்களால் சனிபகவான் அருளால் மகிழ்ச்சியான மற்றும் வசதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசியின் நான்காம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். எனவே, துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மகாதசா யோகம் பல நன்மைகளை தரப்போகிறது. இந்த ராசிக்காரர்களின் பல லட்சியங்கள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
அவர்கள் தங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த முடியும். அவர்களின் வாழ்க்கைத்தரம் பலமடங்கு உயரும். வேலை தேடுபவர்களுக்கு அல்லது மாற விரும்புபவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். அவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவார்கள்.
மீனம்
மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் சனி இருக்கிறார். எனவே, சனி மகாதசையால், மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் வரப்போகிறது. இதுவரை அவர்கள் வாழ்க்கையில் இருந்த நிதி பிரச்சினைகள் மற்றும் கடன் தொல்லைகள் இப்போது முடிவுக்கு வரும். மீன ராசிக்காரர்கள் மனதில் நீண்ட காலமாக இருந்து வந்த ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும், எனவே இந்த ராசிக்காரர்கள் அனைத்தையும் சாதிக்க ஒரு சாதகமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

