Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
சனி பகவான் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: அக்டோபர் 05 முதல் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை செழிப்பா இருக்கும்..
Shani Dev Make Shadashtak Yog On 05 October 2025: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
இப்படிப்பட்ட சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இப்படி ஒரு ராசியில் பல மாதங்கள் நீடித்திருப்பதால், அவர் மற்ற கிரகங்களுடன் அவ்வப்போது ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்குவார். இந்நிலையில் சனி பகவான் அக்டோபர் மாதத்தில் ஒரு சிறப்பான யோகத்தை உருவாக்கவுள்ளார்.

அதுவும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனுடன் சேர்த்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.
ஜோதிடத்தின் படி, ஷடாஷ்டக யோகத்தின் போது சனியும், புதனும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் இருப்பார். இந்த யோகத்தின் போது புதன் துலாம் ராசியில் இருப்பார். இப்போது சனி மற்றும் புதனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தடைபட்டு வந்த வேலைகள் சிறப்பாக முடியும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தாயாருடனான உறவு சிறப்பாக இருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். அக்டோபர் 05 முதல் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் உணர்வீர்கள். ஆனால் எதிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகள் பேரழிவை ஏற்படுத்தும். எனவே சற்று நிதானமும், பொறுமையும் இருந்தால், வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications