Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சுமார் 559 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 7 நவபஞ்ச ராஜயோகங்களால் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Seven Navpancham Yog 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அவ்வபோது சுப யோகங்களையும், ராஜயோகங்களையும் உருவாக்கி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் அரிதாக நிகழும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ஒரு அரிய நிகழ்வு சுமார் 559 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதாவது 7 நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகங்களானது குரு-கேது, செவ்வாய்-சுக்கிரன், சனி-செவ்வாய், புதன்-குரு, சந்திரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களால் உருவாகவுள்ளது. பல வருடங்களுக்கு பின் இந்த ராஜயோகங்கள் உருவாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, பணியிடத்தில் பதவி உயர்வும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது 7 நவபஞ்ச ராஜயோகங்ளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 7 நவபஞ்ச ராஜயோகங்களால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. சிலருக்கு எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நிறைய செலவுகளை சந்தித்தாலும், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 7 நவபஞ்ச ராஜயோகங்களானது தைரியத்தையும், துணிச்சலையும் அளிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நல்ல வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நிறைய லாபத்தைத் தரும் புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 7 நவபஞ்ச ராஜயோகங்களானது நிதி நிலையில் எதிர்பாராத அளவில் உயர்வை ஏற்படுத்தவுள்ளது. முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒருவேலை புதிய முதலீடுகளை செய்ய நினைத்தால், அதற்கும் இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனங்களையும் வாங்கலாம். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications