Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
சந்திரன் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஜனவரி 27 முதல் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
Saturn's Third Aspect Falls On The Moon: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றியோ, ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். அதேப் போல் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன்.
மேலும் சனி மற்றும் சந்திரன் இயற்கையாகவே எதிரிகளாவர். அதுவும் சனி சந்திரனை பார்க்கும் போது, சந்திரனின் சேர்மறை ஆற்றல் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மனநிலை, உணர்ச்சிகள் போன்றவை பாதிக்கப்படும். இந்நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசியில் இருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

அப்போது சனி பகவான் மீன ராசியில் இருப்பார். இதனால் சனி பகவானின் மூன்றாம் பார்வை சந்திரன் மீது விழுந்து, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக தொழில், ஆரோக்கியம் மற்றும் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சந்திரன் மீது விழும் சனி பகவானின் மூன்றாம் பார்வையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சந்திரன் மீது விழும் சனி பகவானின் மூன்றாம் பார்வையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதளவில் சவாலானதாக இருக்கலாம். மனதில் எதிர்மறை உணர்ச்சிகள் அதிகரித்து, மன அழுத்தமும் அதிகரிக்கலாம். வேலையில் தாமதங்கள், சிறு கருத்து வேறுபாடுகள் அல்லது குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்பு எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
சந்திரன் மீது விழும் சனி பகவானின் மூன்றாம் பார்வையால் கடக ராசிக்காரர்களின் உணர்ச்சிகள் மோசமாக பாதிக்கப்படும். நிறைய சவால்களை சந்திப்பீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கும் அதிகம் கோபப்படுவீர்கள். பொறுமை இருக்காது. வேலையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். தன்னம்பிக்கை குறையக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கையும், கவனமும் அவசியம். மொத்தத்தில் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இதன் மூலம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.
விருச்சிகம்
சனி பகவானின் மூன்றாம் பார்வை சந்திரன் மீது விழுவதால் விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்திரனில் சனியின் செல்வாக்கு அதிகம் இருப்பதால், வேலையில் நிறைய இடையூறுகளை சந்திப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காது. உங்கள் முடிவெடுக்கும் திறன்கள் பலவீனமடையக்கூடும். எனவே இக்காலத்தில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது உங்கள் வார்த்தைகளில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
