Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் சனி உருவாக்கும் தன ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Saturn Will Make Dhan Rajyog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலையை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, பல சுப யோகங்களையும் உருவாக்குகின்றன. நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான்.
இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அதுவும் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணித்து வருகிறார். மேலும் சனி பகவான் அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாகியும் பயணித்து வருவார்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சனி பகவான் தன ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சனியின் ஆசியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது சனி பகவானால் 2026-ல் உருவாகும் தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் தன ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் தன ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பயணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்று தன ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் பணம் குவியும். மேலும் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் சனி பகவானின் ஆசியாலும், தன ராஜயோகத்தாலும் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications