Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
மீன ராசியில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
Saturn Venus Moon Made Trigrahi Yog In Pisces 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நவகிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இதனால் சந்திரன் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் சந்திரன் மே 22 ஆம் தேதி மதியம் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவானும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் பயணித்து வருகின்றன. இதனால் மீன ராசியின் சந்திரன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த திரிகிரக யோகமும் உருவாகியுள்ளது.

இந்த திரிகிரக யோகத்தின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள். உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். இதன் மூலம் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் அடுத்த 2 நாட்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட கதவு திறந்து, கைகளில் செல்வம் குவியும். சிலருக்கு புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும்.
நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுடன் நட்பு கிடைக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷக் கதவு திறக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











