Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
சனி-சுக்கிரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Saturn Venus Make Shadashtak Yog On 18 September 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் 15 ஆம் தேதி சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதே சமயம் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி சனி பகவானும், சுக்கிரனும் 150 டிகிரியில் இருந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கியமாக பண இழப்புகள் ஏற்படலாம் மற்றும் உடல் ஆரோக்கியமும் மோசமடையலாம். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது வாழ்க்கையில் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் பட்ஜெட் பாழாகும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதிலும் ஏற்கனவே ஏழரை சனி நடக்கிறது. இதனால் இருமடங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் எந்த முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். மோசமான விளைவுகளைத் தவிர்க்க சனி பகவானின் மந்திரங்களை பாராயம் செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது தீங்கை விளைவிக்கும். இந்த யோகத்தால் குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் மந்தத்தை சந்திக்க நேரிடும். இந்த யோகத்தால் சில முக்கியமான வேலைகள் முடிக்கப்படாமல் போகலாம். பணியிடத்தில் கவனக்குறைவால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சனி மற்றும் சுக்கிரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதனால் இக்காலத்தில் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். புதிதாக எந்த ஒரு வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications