Latest Updates
-
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள தசாங்க யோகம்: இந்த 3 ராசிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Saturn Venus Make Dasanga Yog On 13 June 2025: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். கிரகங்களிலேயே சனி மெதுவாக ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். இந்நிலையில் சனியின் தீய பார்வை ஜாதகத்தில் விழுந்தால், அது ஒருவரது வாழ்க்கையையே நரகமாக்கிவிடும்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அடுத்த 2 1/2 ஆண்டுகள் இந்த ராசியில் தான் இருக்கப் போகிறார். இதனால் இக்காலகட்டத்தில் இவர் அவ்வப்போது ஏதாவது ஒரு கிரகத்துடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சத்தின் மூலமோ யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் இன்னும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் சனி பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளார். இந்த யோகமானது ஜூன் 13 ஆம் தேதி, அதாவது இன்று உருவாகியுள்ளது. அதுவும் இந்த யோகமானது சனியும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரியில் இருக்கும் போது உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல பலன்களையும் பெறவுள்ளார்கள். இப்போது தசாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது பல வழிகளில் நன்மைகளை அளிக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல திட்டத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் திருப்தி அடைந்து புதிய பொறுப்புக்களை வழங்கலாம். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சேமிக்கவும், நிறைய பணத்தை சம்பாதிக்கவும் முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது அதிர்ஷ்டத்தை அளிக்கப் போகிறது. ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தசாங்க யோகம் உருவாகியுள்ளதால், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது நல்ல பொருள் இன்பங்களைத் தரும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வசதிகள் அதிகரிக்கும். சொத்துக்களில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் நிறைய லாபத்தை பெறக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அந்த செலவுகளும் சுப செலவுகளாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
