Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
சனி-சுக்கிரனால் உருவாகும் அபூர்வ யோகம்: டிசம்பர் 05 முதல் இந்த 3 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியபோகுது
Saturn Venus Make Ardhakendra Yog On 05 December 2024: வேத ஜோதிடத்தில் சனி மற்றும் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன் அளிக்கும் நீதிமான். ஏழையையும் பணக்காரராக்கும் ஆற்றல் கொண்டவர்.
அதேப் போல் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல், அதிர்ஷ்டத்தின் காரணியாவார். இந்த சுக்கிரனின் நிலை சிறப்பாக இருந்தால் தான் அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இவற்றில் சனி தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 05 ஆம் தேதி சுக்கிரன் சனி பகவானின் மற்றொரு ராசியான மகர ராசிக்குள் நுழைகிறார்.

ஜோதிடத்தில் சனியும், சுக்கிரனும் நண்பர்களாவர். இவ்விரு கிரகங்களின் நிலைகளால் அர்த்த கேந்திர யோகம் உருவாகவுள்ளன. இந்த யோகமானது மங்களகமானதாக கருதப்படுகிறது. சுக்கிரன் மகர ராசியில் டிசம்பர் 28 ஆம் தேதி வரை பயணிப்பார். இதனால் இந்த யோகமும் டிசம்பர் 28 வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரனும், 11 ஆவது வீட்டில் சனியும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணமும் தேடி வரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரனும், 6 ஆவது வீட்டில் சனியும் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல பிணைப்பு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சுக்கிரனும், 2 ஆவது வீட்டில் சனியும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சம்பள உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றியும், செல்வமும் குவியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











