27 வருடம் கழித்து சொந்த நட்சத்திரம் செல்லும் சனிபகவான்: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கும்!

Saturn Transit in Uthirattathi Nakshatra On 20 January 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இக்காலகட்டத்தில் சனி பகவான் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 20 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். சொந்த நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வது சற்று சிறப்பு வாய்ந்தது.

Saturn Transit in Uthirattathi Nakshatra On 20 January 2026 Lucky Zodiac Signs

முக்கியமாக சனி பகவான் இந்த நட்சத்திரத்திற்கு சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். என்ன தான் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மகத்தான நிதி நன்மைகளுடன், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சனி பகவானின் அருளால் நிதி நிலைமை வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும்.

மிதுனம்

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் ஜனவரி இறுதியில் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, கைக்கு வந்து சேரும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, January 8, 2026, 16:39 [IST]
Desktop Bottom Promotion