சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!

Saturn Transit In Uthirattathi Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, சனி பகவானின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தெரியும். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் ரேவதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

Saturn Transit In Uthirattathi Nakshatra 2026 These 3 Zodiac Signs Will Reap The Rewards Of Their Hard Work

இந்நிலையில் இந்த சனி பகவான் அக்டோபர் 09 ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரி 08 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். சொந்த ராசிக்கு சனி பகவான் மீண்டும் நுழைந்து பயணிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அக்டோபரில் நடக்கும் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பொருள் வசதிகள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

மகரம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகளைத் தரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடன் ஆதரவுடன் உங்கள் வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். சொந்த தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், அதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஒவ்வொரு விஷயத்திலும் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவுகள் வலுவடையும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

கும்பம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருந்தால் அது நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக பணியிடத்தில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, September 26, 2026, 9:54 [IST]
Desktop Bottom Promotion