Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
27 ஆண்டுகள் கழித்து சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Transit In Uthiraadam Nakshatra On April 2025: கர்ம பலனை அளிக்கும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சனி பகவான் 2025 மார்ச் 29 ஆம் தேதி தான் மீன ராசிக்குள் நுழைந்தார்.
குரு பகவானின் ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் நுழைந்துள்ளார். இந்நிலையில் சனி பகவான் ஏப்ரல் மாத இறுதியில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் தனது சொந்த நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சனி பகவான் 27 நட்சத்திரங்களையும் சுற்றி வர 27 ஆண்டுகள் ஆகும். இதனால் உத்திராடம் நட்சத்திரத்திற்கு சுமார் 27 ஆண்டுகள் கழித்து சனி பகவான் செல்லவுள்ளார்.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படப் போகிறது. இப்போது சனி பகவான் உத்திராடம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் நடந்து வரும் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட காலமாக செய்து வந்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பெரிய பொறுப்புக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஏற்கனவே ஏழரை சனியில் இருந்து நிவாரணம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சொந்த நட்சத்திரத்திற்கு சனி செல்வதால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். தினசரி வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் சிறப்பான செயல்திறனால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மார்கெட்டிங் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். செல்வம் பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சில நன்மைகள் கிடைக்கப் போகிறது. ஏற்கனவே ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதேப் போல் குடும்பத்தில் நடந்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரக்கூடும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாட்டில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் தேடி வரும். மொத்தத்தில் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications