Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சூரியன் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே சூப்பராக மாறப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா?
12 மாதங்களுக்குப் பிறகு, சூரியன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்குள் நுழைகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் நுழையும் சூரியன், மே மாதம் ரிஷப ராசியில் நுழைகிறார். ரிஷபம் என்பது சுக்கிரனின் ராசி. மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கை இப்போதிருப்பதை விட சிறப்பானதாக மாறுகிறது.
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனுக்குள் நுழையும் போது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொண்டுவரப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் ரிஷப ராசிக்கு செல்வது சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. இதனால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. சூரியன் சிம்ம ராசியில் தனது நிலையை ஒரு கர்ம நிலையில் பலப்படுத்தப் போகிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அடைய இது சிறப்பான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் மனஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வியாபாரத்தை தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனைகளை செய்ய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் . அவர்கள் தங்கள் திறன்களுக்கு ஏற்ற புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சி சிறப்பான நன்மைகளை அளிக்கும். அவர்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அவர்கள் அதிக வருமானத்திற்கான புதிய வழிகளைக் கண்டறிய முடியும். கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தின் மூலம் நன்மைகளைப் பெற ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவார்கள்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். அவர்களின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எதிர்கால பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

