Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
2025-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Saturn Transit In Pisces 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதுவும் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியின் அதிபதி குரு பகவான்.

இந்த குரு பகவானின் ராசிக்கு செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். சனி பகவான் இந்த மீன ராசியில் 2027 ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது 2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். மேலும் தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகமாக முடிவடையும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் இலக்கை எளிதில் அடைவீர்கள். முக்கியமாக வாழ்க்கையில் நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் 2025-ல் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். மேலும் மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். இதனால் நீண்ட காலமாக முடிக்க முடிவுக்கு வராமல் கஷ்டத்தை கொடுத்து கொண்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பல சிறிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆனால் பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலை சற்று அதிகரிக்கலாம். அப்போது சற்று அலைய வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறவுள்ளார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, எதிர்பாராத அளவில் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
தேவையற்ற செலவுகள் குறையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். வியாபாரிகளின் திட்டங்கள் நிறைய லாபத்தைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications