Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
2026-ல் சனிபகவானால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
2025 இன்னும் இரண்டு மாதத்தில் முடியப்போகிறது. புத்தாண்டு தொடங்கும் போது, சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருகிறது. 2025-ல் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெற போகின்றன. குறிப்பாக 2026-ல் நடைபெறும் சனிப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது.
2026 ஆம் ஆண்டில், குரு, சூரியன், செவ்வாய், ராகு, கேது போன்ற அனைத்து கிரகங்களும் தங்கள் நிலையை மாற்றவிருக்கிறது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் மீன ராசியில் இருந்தாலும் சில ராசிக்காரர்கள் 2026-ல் மகத்தான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
2026 ஆம் ஆண்டில் சனிபகவானின் ஆசியால் ரிஷப ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் நிதிநிலை அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் நீங்கி அவர்கள் வாழ்க்கையின் இனிமையான கட்டத்திற்குள் நுழையப் போகிறார்கள். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைவீர்கள். புதிய வாகனம் ஒன்றை வாங்கலாம்.
அவர்கள் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை அடைவார்கள். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இது உங்கள் வேலையில் மாற்றங்களைக் கொண்டுவரும். வியாபாரத்தில் அவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் தேடிவரும். ஆன்லைன் வணிகம் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள் பெரிய லாபத்தைக் காண்பார்கள்.
மிதுனம்
2026 மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அடைவார்கள். காதலில் இருப்பவர்களுக்கு, அவர்களின் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் முடிவடையும். நிதி நிலைமை எதிர்பாராத மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
திருமணமாகாதவர்களுக்கு, பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைக்கக்கூடும். சனிபகவானின் ஆசீர்வாதம் அவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளைக் கொடுக்கப்போகிறது. இந்த ஆண்டில் அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சரியான தருணமாக இருக்கும்.
துலாம்
2026 ஆம் ஆண்டு சனிபகவான் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது. அவர்களின் கடந்த கால பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் திரும்பும். அவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் அவர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும். அவர்களின் தன்னம்பிக்கையால் தொழிலில் வெற்றிகள் குவியும்.
கடந்த காலத்தில் தடைபட்ட அனைத்து வேலைகளையும் இப்போதும் வெற்றிகரமாக முடிக்கலாம். பொருளாதார நிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் இப்போது விரைவாக தீர்க்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

