Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
2025-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் அடுத்த 2 1/2 வருஷம் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. அதுவும் சனி மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்பதால், ஒருவரது வாழ்க்கையில் சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சனி பகவான் ஒரு ராசியின் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
கிரகங்களில் சனி ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். தற்போது சனி தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் போது சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார்.

சனி பகவான் மீன ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். அதுவும் இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியுடன், சில ராசிக்காரர்களுக்கு அஷ்டம, அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது.
ஜோதிடத்தின் படி, சனி 12, 8 மற்றும் 4 ஆம் வீடுகளில் நுழையும் போது, சனியின் தாக்கம் சற்று மோசமாக இருக்கும். இதன் விளைவாக வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 1/2 ஆண்டுகள் சற்று சிரமமாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் வீட்டில் அமைதி குறையும். வாகனங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சிறு வேலைகளை முடிக்க கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக பண இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். அதுவும் மூட்டு வலி, மறதி, மன குழப்பம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். சனியின் தாக்கத்தைக் குறைக்க சனி பகவானுடன் அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும். கடவுள் வழிபாடு ஒன்றே சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.
சிம்மம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மார்ச் 29 முதல் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
அடிக்கடி ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும். மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளுக்காக நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அவ்வப்போது எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் பண பற்றாக்குறையால் சிரமப்பட நேரிடும்.
பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். எனவே பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தைக் குறைக்க சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மேலும் அனுமன் சாலிசாவைப் படிப்பதோடு, அனுமனை வழிபட்டு வர வேண்டும்.
தனுசு
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.
வேலை காரணமாக அல்லது பிற விஷயங்களுக்காக இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்காது. இதனால் மிகுந்த மன வருத்தத்தை அடைவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். ஆனால் குருவின் ஆசியால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு இருந்தவாறு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











