Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனிபகவான் மீன ராசிக்கு செல்வதால் 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கப்போகுதாம்...!
Saturn Transit: சனிபகவான் அனைவரும் அஞ்சி நடுங்கும் கடவுளாவார். நமது தவறுகளுக்கு சரியான தண்டனையைக் கொடுப்பதே சனிபகவான் மீதான இந்த பயத்திற்குக் காரணமாகும். அதனால்தான் கிரக பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சனி மிக மெதுவாக நகரும் கிரகம். சனி இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருக்கிறார்.
வரப்போகும் 2025-ல் சனிபகவான் இரண்டு பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகப் போகிறார். இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானால் ஏற்படும் இந்த மாற்றங்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
சனியின் மூல ராசியான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்த வருடம் சனியின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் சனி நீசமாக இருக்கும். இதன் காரணமாக அடுத்த ஆண்டில் எதிர்பாராத நிதி ஆதாயமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளைவெற்றிகரமாக முடிப்பதற்கான காலகட்டமாக இது இருக்கும்.
பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் பொருளாதாரரீதியாக பெரும் முன்னேற்றம் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
துலாம்
2025-ல் சனிபகவானின் மாற்றங்கள் நல்ல பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி துலாம். சனிபகவான் துலாம் ராசியின் 6-ம் வீட்டிற்கு வருகிறார். இந்த காலகட்டம் அவர்களுக்கு சட்ட விவகாரங்களிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சாதகமான காலமாக அமையும்.
2025-ம் ஆண்டு துலாம் ராசி வணிகர்களுக்கு லாபம் தரும் ஆண்டாக இருக்கும். அவர்கள் எதிரிகளை எதிரில் வெல்ல முடியும். துலாம் ராசிக்கு ஐந்தாம் அதிபதியும் சனிபகவான்தான். இது குழந்தைகள் சம்பந்தமான ஸ்தானம் என்பதால் இந்த காலத்தில் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கேட்கலாம். காதலிப்பவர்கள் திருமணம் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் சஞ்சாரத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம். ஏனெனில் சனிபகவான் இந்த ராசியின் கர்ம பாவத்திற்கு மாறுகிறார். பணியில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
வேலை தேடும் மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையின் சிறந்த காலம் வரப்போகிறது. வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நிதி ஸ்திரத்தன்மையை அடைய உதவும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடனான உறவு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் செய்யும் காரியத்தில் வெற்றியும், திருப்தியும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

