Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
2025 சனிபெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு தொடங்கும் அஷ்டம சனி.. இனி அடுத்த 2 1/2 வருஷம் எப்படி இருக்கும் தெரியுமா?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசிமாற்றம் மார்ச் மாத இறுதியில் நிகழவுள்ளது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
சனி பகவான் வரும் 29ஆம் தேதியன்று தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். சிம்ம ராசிக்கு சனிபகவான் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு உடையவர்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கண்டச்சனியாக பயணம் செய்த சனிபகவான் இனி அஷ்டம சனியாக இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். இந்த அஷ்டம சனியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செல்லும் சனிபகவானால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். எந்த ஒரு பண முதலீடுகளையும் செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம்.
வேலை செய்யும் இடத்தில், நீங்கள் செய்யும் காரியங்களை மறைத்து உங்களுடைய திறமைகள், புகழ், பெருமைகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். பேராசை பட வேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.
யாருக்காவது பணம் கடனாக கொடுக்கும் முன்போ அல்லது ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கி கொடுக்க நினைத்தாலோ கவனம் தேவை. யாராவது பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள். அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். பேச்சினால் பிரச்சினை வரலாம் ஜாக்கிரதை. உடல் நலப்பிரச்சினையால் வேலையை விடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும்.
சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. இரண்டாம் வீடு, மற்றும் ஐந்தாம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுகிறது. இந்த கால கட்டத்தில் பிசினஸ் செய்பவர்கள் பண முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
பணத்தை பத்திரமாக பாதுகாப்பது அவசியம். பேசும் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் இல்லாவிட்டால் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கூட சண்டைகள் வரலாம். எனவே கவனமாக பேச வேண்டும்.
தொழில் வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அனைத்து ஆவணங்களையும் நன்றாக படித்து பார்த்து கவனமாக கையாளவும். அஷ்டம சனி காலத்தில் உடல் ரீதியாக பாதிப்பு வரலாம். எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சி பண்ணலாம். உங்களுடைய தசாபுத்தி சரியாக இருந்தால் நிச்சயம் வெற்றிகள் தேடி வரும்.
சனிப்பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சனிக்கிழமையில் வரும் சனி ஹோரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி சனிபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications