Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
2026-ல் நடக்கும் சனி, ராகு மாற்றங்கள்: இந்த 3 ராசிக்கு புது வேலையுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்...
Saturn Rise And Rahu Transit On 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சனி, ராகு போன்ற கிரகங்கள் தங்களின் நிலையை மாற்ற நீண்ட காலம் ஆகும். இதனால் அந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் சற்று ஆழமாக தெரியும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் நீதிமான் சனி பகவானும், நிழல் கிரகமான ராகுவும் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளனர். அதுவும் சனி பகவான் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அஸ்தமனமாகி உதயமாகிறார். அதோடு ராகு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

இவ்விரு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் நிதி நிலையிலும் திடீர் உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது 2026-ல் சனி, ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2026-ல் நடக்கும் சனி, ராகுவின் நிலை மாற்றங்களால் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
2026-ல் நடக்கும் சனி, ராகுவின் நிலை மாற்றங்களால் துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் சிறப்பான மாற்றங்களைக் காண்பார்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனமாக யோசித்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
2026-ல் நடக்கும் சனி, ராகுவின் நிலை மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications