Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
500 ஆண்டுகளுக்கு பின் சனி வக்ரமாகி குரு உதயமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Saturn Retrograde In Pisces Jupiter Rise In Gemini 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அடிக்கடி வக்ர நிலையிலும், அஸ்தமன நிலையிலும், பின் உதயமாகியும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வருகிற ஜூலை மாதத்தில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதே வேளையில் குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருப்பினும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த கிரகங்களின் நிலைகளால் பிரகாசிக்கப் போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படவும், தொழிலில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. இப்போது குரு உதயம் மற்றும் சனி வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் குரு முதல் வீட்டில் உதயமாகவுள்ளார். அதே வேளையில் சனி பகவான் 10 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
ரிஷபம்
சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் சனி பகவான் 11 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். அதே சமயம் குரு பகவான் 2 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடு செய்ய சிறப்பான காலமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பயணங்கள் நல்ல பலனைத் தரும். படிப்பு மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
தனுசு
சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். ஏனெனில் குரு பகவான் 7 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார். அதே வேளையில் சனி பகவான் 4 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீட்டு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications