Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் வக்ரமாகும் சனிபகவான்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Saturn Retrograde In Pisces 2025 After 30 Years: ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார் மற்றும் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் நீதி, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரக்கூடியவர்.
என்ன தான் சனி பகவான் கடுமையானவராக கருதப்பட்டாலும், ஒருவர் நல்ல செயல்களை செய்தால் அந்நபருக்கு பலவிதமான நன்மைகளை அளிப்பார். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இவர் மார்ச் 29 ஆம் தேதி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து விலகி, குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.

மீன ராசிக்கு சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில் சனி பகவான் ஜூலை மாதம் வக்ர நிலையில் மீன ராசியில் பயணிக்கவுள்ளார். சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும், சில ராசிக்காரர்கள் சனி வக்ரமாவதால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் திடீர் நிதி நன்மைகளும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது எந்த ராசிக்காரர்கள் மீன ராசியில் சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிலவும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள் மற்றும் நல்ல வெற்றியையும் காண்பார்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சொத்துக்களால் நிறைய லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
