Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் சனி-ராகுவால் உருவாகும் பிசாசு யோகம்: இந்த 3 ராசிக்காரங்க மே வரை கவனமா இருக்கணும்..
Saturn Rahu Conjunction Make Pishach Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிரகம் தான் சனி. இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணிப்பார்.
தற்போது சனி தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் ராகு சேர்க்கையால் பிசாசு யோகம் என்னும் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது.

முக்கியமாக இந்த யோகமானது மே மாதம் வரை நீடித்திருக்கும். ஏனெனில் மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பிசாசு யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கையில் இருந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் அழியும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எந்த வேலையை செய்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற்றாலும், செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான எந்த முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய கடன்களை வாங்கி அவதிப்பட நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கல்களை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் பிசாசு யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வயிற்று பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். மன அழுத்தம் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
