Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
30 ஆண்டுகள் கழித்து 2025-ல் நிகழும் சனி ராகு சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Saturn Rahu Conjunction 2025 In Pisces: வேத ஜோதிடத்தின் படி 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டில் பல கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஏற்படுவதோடு, கிரக சேர்க்கைகளும் நிகழவுள்ளன. அதுவும் இந்த ஆண்டில் சனி, ராகு, கேது, குரு ஆகிய கிரகங்கள் ராசி மாற்றவுள்ளன. இந்த பெரிய கிரங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக நீதிமான் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசிக்குள் சனி செல்லும் போது, அந்த ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், இவ்விரு கரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் மீன ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

ஜோதிடத்தில் சனி-ராகு இடையே நட்பு உணர்வு உள்ளது. இதனால் இவ்விரு கிரகங்களின் தாக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கையானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் பெருகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்ப்புக்கள் உள்ளன. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது. ராகுவும் சனியும் ஆறாவது வீட்டில் இணைந்திருப்பதால் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொல்லை தந்து வந்த எதிரிகளை தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
