Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா?
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 2 ராசிக்காரர்கள் அடுத்த 3 மாசத்துக்கு நரகத்தை அனுபவிக்கப் போறாங்களாம்
நவகிரகங்களில் மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனி மிகவும் மெதுவாக நகரும் ஒரு கிரகம். ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. சனியின் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். சிலர் சனிபகவானின் மாற்றத்தால் நேர்மறை பலன்களை அனுபவித்தாலும், சில ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். பூரட்டாதி என்பது குருபகவானின் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் ஏப்ரல் 28 வரை இருப்பார். சனிபகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள், என்ன சிரமங்களை சந்திக்கப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஏப்ரல் 28 வரை சில விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த காலகட்டத்தில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும், இல்லயெனில் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஏதாவது சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தைச் சேமிப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் தொடர்ந்து நிலவும் குடும்பத் தகராறில் தலையிடுவது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் மனதைப் புண்படுத்தும் பல விஷயங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பல சிக்கல்கள் எழுந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்கள் நடக்கலாம். உங்களை சோகமாகவும், கோபமாகவும் மாற்றுகிற விஷயங்கள் அடிக்கடி நடக்கும். அதேசமயம் வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஏற்படும் சில விஷயங்கள் மனக் கஷ்டங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும்.
குழந்தைகளால் சில மோசமான சம்பவங்கள் நடக்கலாம். நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பும் விஷயங்களை அடைவதில் பல சிரமங்களைச் சந்திப்பீர்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இப்போதைக்கு அந்த முயற்சி பலிக்காது.
விருச்சிகம்
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தொழிலில் லாபமும், முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி இருக்காது. பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும். புதிய வேலையைப் பெற நீங்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும்.
அவர்கள் தற்போதைய வேலையிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் மற்றவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி முன்னேற்றத்தை அடைய நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும். பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் மூத்த உறுப்பினர்களின் வார்த்தைகளைக் கேட்பது நல்லது. வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென்றால், எல்லாவற்றையும் பொறுமையுடன் செய்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கோபத்தைக் குறைப்பது நல்லது, அதிகப்படியான கோபத்துடன் செய்யப்படும் எதுவும் தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
