Latest Updates
-
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
27 ஆண்டுகளுக்கு பின் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்லும் சனிபகவான்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பணமழை கொட்டும்..
Saturn Nakshatra Transit 2025: வேத ஜோதிடத்தின் படி, ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் தான் சனி பகவான். இந்த சனிபகவான் ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் காரணியாவார். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான், தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார். சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கும். இப்போது சனி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மை பயக்கும். அதுவும் சனி பகவான் வருமானம் மற்றும் லாப வீட்டில் இருக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்க்கையில் நல்ல செழிப்பைக் கொண்டு வரும். அதிர்ஷ்ட வீட்டில் சனி பகவான் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் குவியும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நன்மைகளையும் வழங்கும். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சனியின் அருளால் புதுமண தம்பதிகள் மற்றும் நீண்ட காலமாக குழந்தைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
