Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சனி-சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிகளை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது!
Saturn Moon Make Vish Yog On 12 August 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர் சந்திரன். இந்த சந்திரன் மனதின் காரணியாவார். ராசிகளில் இவர் கடக ராசியின் அதிபதியாவார். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார்.
இப்படி குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சந்திரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மோசமான விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதி இழப்புக்களை அதிகம் சந்திக்கலாம். இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் மூலம் பட்ஜெட் பாதிக்கப்படலாம். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இக்காலத்தில் கிடைக்காது. பணியிடத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காது. இதனால் வேலைகளை முடிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அலுவலகத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்படலாம். முக்கியமாக யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. ஏதேனும் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால், அது முற்றி உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும். மேலும் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் நோய்களால் அவதிப்பட நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் வேலைகளில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். கூட்டு தொழில் செய்து வந்தால், இழப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications