சனி-சந்திரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...

Saturn Moon Make Shadashtak Yog On 27 May 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Saturn Moon Make Shadashtak Yog On 27 May 2026 These Zodiac Signs Should Be Careful

அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் ஒன்றிணைந்து ஒரு அசுப யோகத்தை உருவாக்கவுள்ளன. அது தான் ஷடாஷ்டக யோகம். இந்த யோகமானது மே 27 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது சந்திரன் துலாம் ராசிக்கு செல்வார். இதனால் சனி மற்றும் சந்திரனின் நிலையால் ஷடாஷ்டக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோக காலத்தில் சனி சந்திரனுக்கு 6 ஆவது வீட்டிலும், சந்திரன் சனிக்கு 8 ஆவது வீட்டிலும் இருப்பார்கள். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் மன அமைதியின்மை, நிதி இழப்பு மற்றும் வாக்குவாதங்கள் போன்ற குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்டு வரக்கூடும். இப்போது சனி சந்திரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

ஷடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் மன ரீதியானமற்றும் நிதி ரீதியான அழுத்தத்தை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு பெரிய நிதி முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கி அவதிப்பட நேரிடும்.

மிதுனம்

ஷடாஷ்டக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். திடீரென்று எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, பட்ஜெட்டை சீர்குலைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறு தவறான வார்த்தையும் குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

கன்னி

ஷடாஷ்டக யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். குடும்ப வாழ்க்கையும் நிம்மதியில்லாமல் இருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரில்கள் அதிகரிக்கலாம். இதனால் உறவுகளில் சிறு விரிசல் ஏற்டபாலம். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

ஷடாஷ்டக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் போகலாம். இதனால் விரக்தி அதிகரிக்கும். உங்கள் தாயார் அல்லது வயதான குடும்ப உறுப்பினரின் உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, May 27, 2026, 16:15 [IST]
Desktop Bottom Promotion