Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
சனி-சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: பிப்ரவரி 27 முதல் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்
Saturn Moon Conjunction Make Vish Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களையும் உருவாக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த கும்ப ராசிக்கு சந்திரன் செல்லவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மோசமான விஷ யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது பிப்ரவரி 27 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு முக்கியமான வேலையையும் தொடங்காமல் இருப்பது நல்லது. யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், சிவனையும், சனி பகவானையும் வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த பயணத்தையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்கள் பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோரால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே சற்று பணியிடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதன் மூலம் பட்ஜெட் பாழாகும். இக்காலத்தில் எந்த புதிய வேலையையும் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications