Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
30 ஆண்டுகளுக்கு பின் சனி, புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: புத்தாண்டில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Saturn Mercury Make Navpancham Rajyog After 30 Years: இன்னும் ஓரிரு நாட்களில் 2026 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் பல யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இந்த யோகங்களினால் புத்தாண்டின் தொடக்கமே அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.
குறிப்பாக இப்படியான ராஜயோகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

இதன் விளைவாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனி, புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் 2026 புத்தாண்டில் தொடக்கத்தில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக தைரியமும், வீரமும் அதிகரக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால் நல்ல பலனைப் பெறலாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நவபஞ்சம ராஜயோகத்தால் புத்தாண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். புதிய வேலை மற்றும் தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நவபஞ்சம ராஜயோகத்தால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மேலும் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இதுவரை தந்தையுடன் பிரச்சனை இருந்தால், அது நீங்கி உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications