Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
30 ஆண்டுகள் கழித்து சனி-புதன் உருவாக்கும் அரிய யோகம்: இன்று இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Saturn Mercury Make Dwidwadash Yog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தனது நிலைகளை மாற்றி, அடிக்கடி அரிய மற்றும் மங்களகரமான யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக புதனும், நீதிமான் சனி பகவானும் பிப்ரவரி 06 ஆம் தேதி ஒரு அரிய யோகத்தை உருவாக்கவுள்ளனர். அது தான் த்வித்வாதஷ் யோகம். இந்த யோகத்தின் போது புதனும், சனியும் ஒருவருக்கொருவர் 30 டிகிரியில் இருப்பர். மேலும் எப்போது இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் 2 மற்றும் 12 ஆவது வீடுகளில் இருக்கிறதோ, அப்போது இந்த யோகம் உருவாகும்.

இந்நிலையில் சனி மற்றும் புதனால் இந்த அரிய யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது சனி புதனால் உருவாகும் த்வித்வாதஷ் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி மற்றும் புதனால் உருவாகும் த்வித்வாதஷ் யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திட்டமிட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
சனி மற்றும் புதனால் உருவாகும் த்வித்வாதஷ் யோகத்தால் கடக ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வங்கி இருப்பில் இருமடங்கு உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மேலும் நீண்ட கால ஆசை ஒன்று இந்த யோக காலத்தில் நிறைவேறும்.
துலாம்
சனி மற்றும் புதனால் உருவாகும் த்வித்வாதஷ் யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
