Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
புதனும், சனியும் நேருக்கு நேர் வருவதால் செப்டம்பர் 23 முதல் இந்த 3 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியபோகுது
Saturn Mercury Face To Face On September 2024: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இதனால் இவர் சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். சனி ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், ஏழரை சனி, அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
அதேப் போல் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். இந்த புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சொந்த ராசியான கன்னி ராசியில் நுழையும் போது, சனியும் சொந்த ராசியான கும்பத்தில் இருப்பதால், இவ்விரு கிரகங்களும் நேருக்கு நேர் இருப்பர்.

இப்படி சனியும், புதனும் எதிரெதிரே இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது சனியும், புதனும் நேருக்கு நேர் வருவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதனும், 11 ஆவது வீட்டில் சனியும் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையும் வலுவாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனியும், 7 ஆவது வீட்டில் புதனும் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கொடுக்கப்படலாம். பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு அருமையாக இருக்கும். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனியும், 11 ஆவது வீட்டில் புதனும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். அதேப் போல் நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
