Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
500 ஆண்டுகளுக்கு பின் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு கூரையபிச்சு பணம் கொட்டும்
Saturn Mercury Direct On November 2025: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இந்த சனி பகவான் ஒழுக்கம், நேர்மை, நீண்ட ஆயுள், நோய், துக்கம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதேப் போல் புதனும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இப்படி வக்ரமாக இருக்கும் இவ்விரு கிரகங்களும் நவம்பர் இறுதியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளன. அதில் சனி பகவான் நவம்பர் 28 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இப்படி இவ்விரு கிரகங்களும் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி அடைவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது சனியும், புதனும் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால், ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்தால், சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும். மேலும் ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதனின் ஆசியால் பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் மகர ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மனநிலை சீராக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புத்திசாலித்தனத்தால் பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications