Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
100 ஆண்டுகள் கழித்து நிகழும் சனி செவ்வாயின் அபூர்வ சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Mars Yuti 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்தும் பயணிக்கின்றன. அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார்.
அதேப் போல் செவ்வாய் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இதனால் ஜூலை 06 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சூரியனின் அபூர்வ சேர்க்கை நிகழ்ந்தது. அது என்னவெனில் செவ்வாயும் சனியும் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் இருந்தனர். இந்த நிலையானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இவ்விரு கிரகங்களின் இந்த நிலையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும், வெற்றிகள் குவியும். இப்போது சனி செவ்வாயின் அபூர்வ சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சனியின் அபூர்வ சேர்க்கையானது சாதகமாக இருக்கும். முக்கியமாக புதிய உறவுகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது நல்ல மனநிறைவைத் தரும். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவு வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனியின் அபூர்வ சேர்க்கையானது அதிர்ஷ்டத்தைத் தரும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் திட்டங்கள் நல்லபடியாக நடக்கும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படும். வணிகர்கள் சில பெரிய புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, செவ்வாயின் அபூர்வ சேர்க்கையானது சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. அதோடு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வழிகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications