Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மீன ராசியில் வக்ர நிவர்த்தியடையும் சனி பகவான்: நவம்பர் முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Saturn Direct In Pisces On November 2025: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். முக்கியமாக சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களுடன் தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது.

அதோடு நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுடையும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தை பெறலாம். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
