Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் 15 முதல் இந்த ராசிக்காரங்க சனி பகவானின் பிடியில் சிக்கப் போறாங்க..
Saturn Direct In Aquarius 2024: வேத ஜோதிடத்தில் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மிகவும் மெதுவாக நகர்வதால், சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும்.
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். சனி வக்ர நிலையில் இருந்ததால், இதுவரை சனியின் மோசமான தாக்கத்தில் இருந்து சில ராசிக்காரர்கள் தப்பித்து வந்தார்கள்.

ஆனால் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளதால், சனியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாக உள்ளார்கள். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவால் நவம்பர் 15 முதல் எந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல சவால்களை சந்திக்கவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் 15 முதல் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இந்த சூழ்நிலையில் சற்று கோபத்தைக் குறைக்க வேண்டும்.
தொழில் ரீதியாக, வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் சிலர் வேலையை மாற்ற முயற்சிக்கலாம். வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளால் பிரிவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பள்ளது.
புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் அதிக சிரமத்திற்கு ஆளாவீர்கள். பணத்தை சேமிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் அவதிப்பட நேரிடும்.
வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான போட்டியை சந்திப்பீர்கள். தேவையற்ற செலவுகள் பண பிரச்சனைகளை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களும் பெரிய சண்டையை உண்டாக்கிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications